புனித ஹிஜ்ரி மாதங்கள்
ஆக்கம்: மௌலவி அல்ஹாபிழ் TSA செய்யிது அபு தாஹிர் ஆலிம் மஹ்ழரி ஃபாழில் ஜமாலி MA., M.Phil
முதலாம் மாதம் முஹர்ரம் மாதம்
புத்தாண்டு பூக்கும் புனித மாதம்
முத்து நபி பேரர் இமாம் ஹுசைன்
நினைவேந்தி விழி நீரை சிந்தும் மாதம்
ரெண்டாம் மாதம் ஸஃபர் மாதம்
சங்கை எங்கும் பொங்கும் மாதம்
சாஹிப் அப்பா கொடி ஏற்றிடுவோம்
சார்ந்தவர் கள் புகழ் சாற்றிடுவோம்
மூன்றாம் மாதம் ரபீவுல் அவ்வல்
முத்து நபிகள் உதித்த மாதம்
மௌலிது ஒதி மகிழ்ந்திடுவோம்
மேலாம் நபியன்பைப் பெற்றிடுவோம்
நான்காம் மாதம் ரபீவுல் ஆகிர்
குவலய குத்புகள் நினைவு மாதம்
முஹ்யித்தீனொலி புகழோதியே
புவனத்தில் சுவனத்தின் சுகம் பெறுவோம்.
ஐந்தாம் மாதம் ஜமாதுல் அவ்வல்
ஐயமின்றி ஜெயங்கள் கொணரும் மாதம்
முத்துப்பேட்டை ஒலி நாதரை
முத்தி முக்தியை பெற்றிடுவோம்.
ஆறாம் மாதம் ஜமாதுல் ஆகிர்
நாகூரின் நாயகர் நல்ல மாதம்
ஆறாத பிணி காயம் ஆறிடுமே
மாறாத கவலைகள் மாறிடுமே
ஏழாம் மாதம் ரஜப் மாதம்
மகராஜர் மிஃராஜ் சென்ற மாதம்
அஜ்மீரின் தவராஜர் அருள் வேண்டுவோம்
அகமொன்றி அவர் புகழ் தனைபாடுவோம்
எட்டாம் மாதம் ஷஃபான் மாதம்
எட்டாத நன்மைகள் கிட்டும் மாதம்
பராஅத் இரவிலே வணங்கிடுவோம்
நோயகலும் நோன்பு நோற்றிடுவோம்.
ஒன்பதாம் மாதம் புனித ரமழான்
மறை தந்த இறையோனின் இனிய மாதம்
பாத்திமா கதீஜா ஆயிஷா நல்
ருகையா நாயகியர் நினைவு மாதம்.
பத்தாம் மாதம் ஷவ்வால் மாதம்
மொத்தமாய் நன்மைகள் சொரியும் மாதம்
ஷாதுலி நாயகம் சங்கை மாதம்
எங்கும் மங்களம் பொங்கும் மாதம்.
பதினொன்றாம் மாதம் துல்கஅதா
உத்தமர் உமரொலி புகழின் மாதம்
தப்பாது அப்பாவின் புகழ் ஓதுவோம்
இப்பாரில் இன்பங்கள் நாம் பெறுவொம்.
பன்னிரண்டாம் மாதம் துல்ஹஜ்ஜு
கண்ணிரண்டும் கஅபா காணும் மாதம்
மதீனா மாநபி நகர் ஏகுவோம்
ரவ்ழாவின் முன்னில் கரம் ஏந்துவோம்.
எல்லா மாதமும் நல்ல மாதம்
ஏற்றமும் தோற்றமும் பொழியும் மாதம்
உயர் மாத மாண்பினை அறிந்திடுவோம்
ஒன்றிங்கே கூடி மகிழ்ந்திடுவோம்
முஹையதீன் ஆண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு சம்பவம் குறிப்பிடுவார்கள்...
அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருந்த பொழுது அவர்களிடம் இரண்டு செய்திகள் சொல்லப்படுகின்றது.
இரண்டுக்கும் அல்ஹம்துலில்லாஹ் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே கூறினார்கள்.
ஒன்று அவர்கள் வணிகத்திற்கு அனுப்பிய பொருட்கள் அடங்கிய கப்பல் மூழ்கி விட்டது என்றும்..
இன்னொரு செய்தி இன்னொரு பக்கம் வணிகத்திற்கு சென்ற கப்பல் பெரும் லாபத்துடன் திரும்பிக் கொண்டிருக்கிறது என்றும் கூறப்பட்டதாக சொல்லுவார்கள்.
இரண்டுக்கும் ஒரே மனநிலையில் பதில் அளித்தவர்கள் குத்புகள் நாயகம்.
அதுவே ஏகாந்த நிலையாகும்
ஆக்கம்: மௌலவி அல்ஹாபிழ் TSA செய்யிது அபு தாஹிர் ஆலிம் மஹ்ழரி ஃபாழில் ஜமாலி MA., M.Phil
முதலாம் மாதம் முஹர்ரம் மாதம்
புத்தாண்டு பூக்கும் புனித மாதம்
முத்து நபி பேரர் இமாம் ஹுசைன்
நினைவேந்தி விழி நீரை சிந்தும் மாதம்
ரெண்டாம் மாதம் ஸஃபர் மாதம்
சங்கை எங்கும் பொங்கும் மாதம்
சாஹிப் அப்பா கொடி ஏற்றிடுவோம்
சார்ந்தவர் கள் புகழ் சாற்றிடுவோம்
மூன்றாம் மாதம் ரபீவுல் அவ்வல்
முத்து நபிகள் உதித்த மாதம்
மௌலிது ஒதி மகிழ்ந்திடுவோம்
மேலாம் நபியன்பைப் பெற்றிடுவோம்
நான்காம் மாதம் ரபீவுல் ஆகிர்
குவலய குத்புகள் நினைவு மாதம்
முஹ்யித்தீனொலி புகழோதியே
புவனத்தில் சுவனத்தின் சுகம் பெறுவோம்.
ஐந்தாம் மாதம் ஜமாதுல் அவ்வல்
ஐயமின்றி ஜெயங்கள் கொணரும் மாதம்
முத்துப்பேட்டை ஒலி நாதரை
முத்தி முக்தியை பெற்றிடுவோம்.
ஆறாம் மாதம் ஜமாதுல் ஆகிர்
நாகூரின் நாயகர் நல்ல மாதம்
ஆறாத பிணி காயம் ஆறிடுமே
மாறாத கவலைகள் மாறிடுமே
ஏழாம் மாதம் ரஜப் மாதம்
மகராஜர் மிஃராஜ் சென்ற மாதம்
அஜ்மீரின் தவராஜர் அருள் வேண்டுவோம்
அகமொன்றி அவர் புகழ் தனைபாடுவோம்
எட்டாம் மாதம் ஷஃபான் மாதம்
எட்டாத நன்மைகள் கிட்டும் மாதம்
பராஅத் இரவிலே வணங்கிடுவோம்
நோயகலும் நோன்பு நோற்றிடுவோம்.
ஒன்பதாம் மாதம் புனித ரமழான்
மறை தந்த இறையோனின் இனிய மாதம்
பாத்திமா கதீஜா ஆயிஷா நல்
ருகையா நாயகியர் நினைவு மாதம்.
பத்தாம் மாதம் ஷவ்வால் மாதம்
மொத்தமாய் நன்மைகள் சொரியும் மாதம்
ஷாதுலி நாயகம் சங்கை மாதம்
எங்கும் மங்களம் பொங்கும் மாதம்.
பதினொன்றாம் மாதம் துல்கஅதா
உத்தமர் உமரொலி புகழின் மாதம்
தப்பாது அப்பாவின் புகழ் ஓதுவோம்
இப்பாரில் இன்பங்கள் நாம் பெறுவொம்.
பன்னிரண்டாம் மாதம் துல்ஹஜ்ஜு
கண்ணிரண்டும் கஅபா காணும் மாதம்
மதீனா மாநபி நகர் ஏகுவோம்
ரவ்ழாவின் முன்னில் கரம் ஏந்துவோம்.
எல்லா மாதமும் நல்ல மாதம்
ஏற்றமும் தோற்றமும் பொழியும் மாதம்
உயர் மாத மாண்பினை அறிந்திடுவோம்
ஒன்றிங்கே கூடி மகிழ்ந்திடுவோம்
முஹையதீன் ஆண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு சம்பவம் குறிப்பிடுவார்கள்...
அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருந்த பொழுது அவர்களிடம் இரண்டு செய்திகள் சொல்லப்படுகின்றது.
இரண்டுக்கும் அல்ஹம்துலில்லாஹ் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே கூறினார்கள்.
ஒன்று அவர்கள் வணிகத்திற்கு அனுப்பிய பொருட்கள் அடங்கிய கப்பல் மூழ்கி விட்டது என்றும்..
இன்னொரு செய்தி இன்னொரு பக்கம் வணிகத்திற்கு சென்ற கப்பல் பெரும் லாபத்துடன் திரும்பிக் கொண்டிருக்கிறது என்றும் கூறப்பட்டதாக சொல்லுவார்கள்.
இரண்டுக்கும் ஒரே மனநிலையில் பதில் அளித்தவர்கள் குத்புகள் நாயகம்.
அதுவே ஏகாந்த நிலையாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக